நேபாளத்தில் அரசு எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள் அந்த போராட்டத்தின் போது அவர்களுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் புதிய செயலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்
ட்விட்டர் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி, கடந்த ஜூலை மாதம் பிட்-சாட் மெசேஜிங் செயலி குறித்து அறிவித்தார். இதை அவரது பிளாக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மெசேஜிங் செயலி மூலம் இணையதள இணைப்பின்றியும், செல்லுலார் நெட்வொர்க் சேவையின்றியும், எந்தவித பயனர் கணக்கு இன்றியும், சர்வர்கள் இன்றியும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இது ப்ளூடூத் மூலம் இயங்குகிறது.