
ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அமலாகவுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்போகும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.