மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துரோகி என்று தன் மீது கடந்த மாதம் குற்றம் சாட்டிய நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வைகோவை கண்டித்து கோஷங்கள மல்லை சத்யா ஆதரவாளர்கள் எழுப்பினர். மேலும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் வைகோவை கண்டித்து மல்லை சத்யாவிற்கு ஆதரவாக மதிமுக நிர்வாகிகள் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.