
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர் கவின் 25 வயது நிரம்பிய இவர் ஒரு இன்ஜினியர். இவரது தந்தை சந்திரசேகரன், தாய் செல்வி ஆசிரியை. கவினின் பள்ளித் தோழியான ஒருவர் சித்தா மருத்துவம் முடித்து, நெல்லை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்கள் எனத் தெரிகிறது. தன்னுடைய அக்கா தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவுடன் பழகுவதை விரும்பாத சகோதரன் சுஜித் என்பவன், சூசகமாகப் பேசி, கவினை நெல்லை KTC நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பட்டப்பகலில் கூலிப்படை துணையுடன் கொலை செய்துள்ளான். சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் மணிமுத்தாறு காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகின்றனர்.
. உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள சாதிவெறி என்ற தீராத வியாதிக்கு உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்