எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 72,194 பேரில் 48,954 பேர் இரண்டு ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்றவர்கள் என்ற விவரம் அம்பலமாகி இருக்கிறது.
7.5% ஒதுக்கீட்டில் சேரும் பெரும்பாலோர் இரண்டாவது முறை எழுதியோர் அதிகம். முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் ஒருமுறைக்கு மேல் எழுதியவர்கள்தான்.
லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் கோச்சிங் மையங்களில் படிக்காமல் நீட்டில் வெல்வது கடினம். கல்வியில் சமமற்ற போட்டியை உருவாக்கும்
நீட், ஏழைகள், பெண்கள், ஊரக, முதல் தலைமுறை மாணவர்களுக்கு எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சென்னதை இது மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது