
79 வயதான டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றார். கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற . கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் வைரலானது.
இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் காயம் காணப்பட்டது
இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்