
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் பாராளுமன்ற மேல் சபை எம்பி ஆகி உள்ளார் .
விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்க உள்ளது.
இதற்காக டெல்லி செல்லும் அவர் முதலில் எம்பியாக பதவி ஏற்கிறார். தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் .
இந்த நிலையில் அவர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்