இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.