அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவராக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழு மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் எனத் தெரிவித்தார் இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது

தொடர்ந்து நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அன்புமணியின் தலைவர் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதாகவும் மே 29 முதல் அப்பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.