
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 22 பேர் இதய கோளாறு ஏற்பட்டு மரணம் அடைந்தனர் .
ஒரு பத்தாம் வகுப்பு மாணவனும் பள்ளியில் இதய கோளாறு காரணமாக திடீரென மரணம் அடைந்தான். இதனால் அந்த ஊரை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் இதய நோய் இருக்குமா என்று பயத்தில் ஒரே நேரத்தில் மருத்துவமனைகளுக்கு படை எடுத்தனர இதனால் டாக்டர்கள் அவர்களை பரிசோதிக்க இயலாது திகைத்தார்கள் ஒவ்வொருவரையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இருந்தாலும் தொடர்ந்து அந்த பகுதியில் பீதி நிலவி வருகிறது