வருகிற ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூரில்.
பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.
திருப்பதியை மிஞ்சும் பிரமாண்டத்துடன் முருகன் கோவில் ஜொலிக்கிறது

பழமையை மீட்டெடுத்து
நவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது
எச்.சி.எல் அதிபர் சிவநாடார். அளித்த 200 கோடி நன்கொடையாலும் அரசு மற்றும் அறநிலைய துறை சார்பிலும் சுமார் 200 கோடி செலவு செய்து இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கி உள்ளனர்
புதிய
கலையரங்கம்,அன்னதான கூடம் , நாழிக்கிணறு பாதை, ஏராளமான விடுதிகள் மட்டுமல்லாமல் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாற ஏராளமான படிக்கட்டுகள் என பல வசதிகள் .. அமைக்கப்பட்டு உள்ளன.

கடல் அரிப்பை தடுக்க பாறைகளை கடலில் கொட்டி விரிவுபடுத்தி உள்ளனர்.

கோவிலுக்குள்ளேயும் கற்கோயில் கட்டப்படும் போது எப்படி இருந்ததோ அதேபோல் மாற்றி இருக்கிறார்கள்.

குடமுழுக்கு புண்ணியத்தில் திருச்செந்தூர் கோவில் செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளன.

இவ்வளவு சீரும் சிறப்புமாக செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை குடமுழுக்கு நடந்த பிறகும் பக்தர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் பராமரித்து பாதுகாக்க வேண்டும். என ஆன்மிக வாதிகள் கருத்து தெரிவித்தனர்
குடமுழுக்கு விழாவை ஒட்டி கோவிலில் யார் சாலை பூஜை தொடங்கி நடந்து வருகிறது அதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்தவுடன் உள்ளனர்