ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ரயில் பாதையில் ஒரு பெண் வேகமாக கார் ஓட்டியதை அனைவரும் பார்த்தனர் ,
அடிக்கடி ரயில்கள் போகும் அந்த பாதையில் இந்த பெண் கார் ஓட்டியதை பார்த்து ரயில்வே ஊழியர்கள் உடனடியாக பின் தொடர்ந்து சென்றார்கள். இதற்குள் அந்த பெண் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு பாதையை தண்டவாளத்தை விட்டு விலகி ஒரு மரத்தின் மோதி காரை நிறுத்தினார். உடனடியாக அவரை கைது செய்தனர் .அவர் குடிபோதையில் இருந்தார் .மேலும் ரீல்ஸ் போடும் மோகத்தில் இதை செய்ததாக தெரிவித்தார்.