ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் எச்சரிக்கை தகவல்களை வழங்கியுள்ளது.