சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள், தொடர்கின்றன.

இன்று அதிகாலை புனேயில் இருந்து, 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால், தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்துவிட்டு, அதன் பின்பு பத்திரமாக தரையிறங்கியது