ஹெல்மெட் அணியாமல் புல்லட் பைக்கில் சாலையில் வலம் வந்து வாலிபர் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஹெல்மேட் இல்லாமல் புல்லட் பைக்கை இயக்குகிறார். சாலையில் வளைந்து நெளிந்து ஓட் டுகிறார். அப்போது சாலை நடுவே மாநகர பஸ் ஒன்று பயணிகளுடன் செல்கிறது. அந்த பஸ் முன்பாகவும் தனது வாகனத்தை வளைத்து நெளித்து இயக்கினார். மேலும் அதன் டிரைவரை கிண்டலடித்து வசைப்பாடுகிறார். இந்த வீடியோ வேகமாக பரவியநிலையில் வாலிபரின் இந்த செயலுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் அந்த வாலிபரை கைது செய்து அபராதம் விதித்து ஜாமீனில் விடுவித்தனர்.