வங்கக்கடலில் ஆந்திரா, வடதமிழகம் ஒட்டி காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 10 ஆம் தேதி முதல் 3, 4 நாட்கள் தமிழகத்தில் சிறப்பான இடிமழை வாய்ப்பு உருவாகலாம்.

குறிப்பாக வட உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உருவாகலாம் .

மேலும் மேற்கு மாவட்டங்களின் காற்று மறைவு பகுதிகள் (மேற்கு காற்று வீசும் பகுதிகள் தவிர) மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் இடிமழை வாய்ப்பு உருவாகலாம்.

இதனைத் தொடர்ந்து 13 அல்லது 14 ஆம் தேதி முதல் கேரளா தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவும் வாய்ப்பு உள்ளது. என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்