கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம், கடந்த மே 30-ம் தேதி ஜப்பானில் ரிலீசானது. அந்நாட்டில் 54 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், ரிலீசான 3 நாள்களில் ≈50 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் கூட்டம் பெருகுவதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘தக் லைஃப்’ இன்று வெளியான நிலையில், ‘விக்ரம்’ படமும் வசூலை வாரிக்குவித்து வருகிறது