
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை கொஞ்ச நாள் காத்திருக்கலாமா என்பதில் மக்களுக்குக் குழப்பம் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.