கடன் வாங்கியோரை, கடன் கேட்டு டார்ச்சர் செய்தால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் அபராதம், நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது
வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு,கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள்
குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் வழங்கும் செயலிகள் மூலம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் கடன் கொடுத்தவர்களின் டார்ச்சர் தாளாமல் ஏற்படும் தற்கொலை, அவதூறுகளைத் தடுக்க இந்த அவசர சட்டம்
இதற்கு முடிவு கட்ட கர்நாடக அரசு, சிறுகடன் சட்டத்தில் (MicroFinance) கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் என்ற திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எனினும் கடன் கொடுத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்