தாம்பரத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.

தாம்பரத்தில் ஜி.எம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்,வேலூர், திருச்சி,திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 8வயது 10வயது,13வயது,மற்றும்25 வயதுடைய சுமார் 500 கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்..
நான்கு பிரிவுகளாக ஆண்கள்,பெண்கள் என ஒவ்வொரு பிரிவிற்க்கும் தனித்தனியாக ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 30 இடங்களை பிடித்த மொத்தம் 350 பேர்களுக்கு மாலையில் நடந்த பரிசளிப்பு வெற்றி விழாவில் வெற்றி கோப்பைகள்,பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் , குரோம்பேட்டை எம் ஐ டி இயந்திரவியல் துறை தலைவர் அண்ணாமலை மற்றும சான் அகாடமி பள்ளி நிர்வாகி மோனிகா ஆகியோர் வழங்கினர்..
இதில் கலந்து கொண்டு விளையாடிய எட்டு வயதுடைய அனைவருக்கும் பதக்கங்கள வழங்கப்பட்டன…
மேலும் இந்த விழாவில் ஜிஎம் அகாடமி பொருளாளர் உமாராணி,பிரசாந்த்,அகில இந்திய சதுரங்க நடுவர் விசாலாட்சி,செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள்,சான் அகாடமி ஊழியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..