சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன், லேப்டாப், ரெப்ரிஜிரேட்டர், கார்பாகங்கள், எல்இடி பல்பு என ஏராளமான பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன்மூலம், 79 சதவீத இந்திய குடும்பங்கள் சீன ரேடார் மூலமாக உளவு பார்க்கப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.