
சீசிங் ராஜா என்கவுன்டர் …
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்ய பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ….
கைது செய்யப்பட்ட சீசிங்கு ராஜா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறபடுகிறது. இந்நிலையில் ரவுடி சீசிங்கு ராஜாவை சென்னை நீலாங்காரை பகுதியில் உள்ள அக்கறை எஸ்கான் TEMPLE பகுதியில் வைத்து வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் விமலன் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் போது சீசிங்கு ராஜா உயிர் இழந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது ..
சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட பல்வேறு ரவுடிகள் என மொத்தம் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா,வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசீங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் தாம்பரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் சுவர் ஒட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
கடந்த இரண்டு மாதங்களாக அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.
ஆனால் சீசீங் ராஜாவின் குடும்பத்தினர் போலீசார் சீசிங்கு ராஜாவை கைது செய்து அழைத்துச் சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் சீசீங் ராஜாவின் மனைவி தனது கணவர் காலையில் வெளியில் சென்றவர் இதுவரை வீடு வரவில்லை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதாக கூறி தனிபடை போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனது கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது இந்த காலகட்டத்தில் அவர் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் எனது கணவரை போலி என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகிறது தமிழ்நாடு அரசு என் கணவரை உயிருடன் மீட்டு தர வேண்டும் தனது கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து A+ குற்றவாளியாக உள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சீசிங் ராஜா. சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் உள்ளன. சீசிங் ராஜா இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நீலாங்கரை பகுதியில் விசாரணைக்காக அழைத்து சென்ற பொழுது ராஜாவை தற்காப்பு கருதி போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
அவரது உடல் தற்பொழுது அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக இருக்கிறது…