குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி பேருந்திற்குள் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாததில் ஈடுபட்டதுடன் சரமாரியாக தாக்கிவிட்டு காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் நடத்துனருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள அலறி அடித்து கொண்டு இறங்கினர்.

ஆத்திரமடைந்த பாதிக்கபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளை நிறுத்தி தாக்கிவிட்டு தப்பி சென்ற வழக்கறிஞர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பயணிகள் அவதியடைந்ததுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கபட்டனர்.

இதனால் ஜி.எஸ்.டி.சாலையில் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.