குரோம்பேட்டை ராதா நகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் குடும்ப உறவை மேம்படுத்தவும், கணவன் மனைவி நட்பின் புனிதத்தையும் போற்றக்கூடிய மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது. ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள செல்வம் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இசை அமைப்பாளர் சத்யா தம்பதியினர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் தம்பதியினர் சென்னை சில்க்ஸ் ரவிசங்கர் தம்பதியினர், மயில் முருகன் தம்பதியினர், சம்பத் குமார் தம்பதியினர் ரத்னம் தம்பதியினர் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சேர்மா செல்வராஜ் நிகழ்ச்சியை நடத்தினார். ராஜ்மோகன் இல்லறமே நல்லறம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் 700க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த அறக்கட்டளை பற்றிய மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 9962206217 / 984374090