
டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி நடிகை சனம் ஷெட்டியிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.
அவரது பதிவில், மோசடி அழைப்புகள், ஆன்லைன் மோசடிகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான லிங்க்-களைக் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.