மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களும்‌ சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நினைவிட வளாகத்திலுள்ள “கலைஞர்‌ உலகம்‌” அருங்காட்சியகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ வரலாற்றுப்‌ புகைப்படங்களை பார்வையிட்டார்கள்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்‌ திரு.எல்‌.முருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.