
பள்ளி முன்னேற்றத்திற்காகவும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் குழுவுக்கு உண்டான முக்கியத்துவத்தை குழு உறுப்பினர்கள் ஆகிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி துறை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கலந்துகொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்.