
தேவையானபொருட்கள்: கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், எண்ணெய் 2டீஸ்பூன், வெங்காயம் 1, தக்காளி 3, முருங்கைகாய், சின்ன வெங்காயம் 10, தண்ணீர் 10கப், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், துவரம் பருப்பு 100கிராம், புளிச்சாறு 2 டேபிள்டீஸ்பூன், கொத்தமல்லி சிறிது, பச்சை மிளகாய் 2, பூண்டு 10, சாம்பார் தூள்- 2டீஸ்பூன், மிளகாய் 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன் வேகவைக்க வேண்டியவை: முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் – 2 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். தாளிக்கும் முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும். சின்ன வெங்காயம்-10, பச்சை மிளகாய், தக்காளி வதக்கிக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள முருங்கை காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார் தூள்-2 டீஸ்பூன், மிளகாய் -1டீஸ்பூன் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், நெய் -2 டீஸ்பூன் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் ரெடி.