தேவையானபொருட்கள்: மைசூர் பருப்பு1 கப், மஞ்-சள்தூள் -சிறிதளவு, எண்ணெய் -1 டீஸ்பூன், தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், வெங்காயம் -1, பூண்டு -7 பல், கறிவேப்பிலை சிறிது, நெய் -4 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைக்கவும். மைசூர் பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் பருப்பை கடைந்து வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து மசித்த பருப்பை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பருப்பு தால் ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு இந்த பருப்பு தால் சுவையாக இருக்கும்.