சென்னை அடுத்த படூர் பகுதியில் ராட்சத எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபிக்கடை எரிந்து 5 லட்சம் பொருட்கள் நாசம்.

சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் எரிவாயு குழய்களை பதித்து வீடுகளுக்கு நேரடி எரிவாயு இனைப்பு வழங்கி வருகிறது.

இதனால் ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத எரிவாயு குழாய் பதித்துள்ள நிலையில் படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து எரிவாயு வெளியானதால் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அந்த எரிவாயு குழாய் விபத்து ஏற்பட்ட பகுதியில் பூமியில் இருந்து தீ பறவி அருகிள் உள்ள ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை பற்றி எரிந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் கடை முழுவதும் எரிந்து 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலானது.

ஆனாலும் தீ அனையாத நிலையில் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் ஜே.சி.பி இயந்திரம் ஒருமணி நேரம் போராடி மண் கொட்டி தீயை கட்டுப்படுத்தினார்கள்.

இதனால் ஒ.எம்.ஆர் சாலை பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு காணப்பட்டது.