
இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி.
அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்
வசித்து வருகிறார்.
இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது.
டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் இரும்பு பலகை நடந்து சென்ற ரேணுகா மீது விழுந்ததில் ரேணுகா பலத்த காயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு வயிற்று பகுதி கை கால் பகுதிகள் பலத்த காயமடைந்தன.
இதை கண்ட பொதுமக்கள் தரமணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து ரேணுகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.