
ருசியான முறையில் பாகற்காய் பொடிமாஸ் செய்து பாருங்கள். சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானபொருட்கள்: பாகற்காய் 1/2 கிலோ, வெங்காயம் நறுக்கியது 2, உப்பு -தேவையான அளவு. தாளிக்க: கடுகு- 1/2 டீஸ்பூன், உளுந்து -2டீஸ்பூன், சீரகம்- 2 டீஸ்பூன், கடலை பருப்பு- 2 டீஸ்பூன், கருவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன், வரமிளகாய்- 2 செய்முறை: முதலில் பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். நடுவில் உள்ள விதைகளை நீக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொஞ்சம் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். அடுத்து பாகற்காய் சுருகியதும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தப்பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பெருங்காய பொடி, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் வேக வைத்த பாகற்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பாகற்காய் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.