குரோம்பேட்டையில் மருந்து விற்பனையாளரை போலீஸ் என கூறி துப்பாக்கி கை விலங்குடன் மிரட்டி 50 லட்சம் பறிக்க முயன்ற கும்பல் பிடிப்பட்டது.
இதற்கு உதவிய வக்கீலும் பிடிபட்டார்.

குரோம்பேட்டையை சேர்ந்த மருந்து விற்பனையாளர் அசாரூதின்(32) மொத்தமாகவும், சில்லறையாகவும் மருத்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்துள்ளார்.

அதே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக தலைமை அலுவலர் இம்ரான்(28).
இவருக்கு அசாரூதின் தொழில் மீது ஒரு கண் விழுந்தது, அவரை துரத்திவிடவும் அல்லது மிரட்டிபணம் பறிக்க திட்டமிட்டார்.

இதற்காக அசாரூதின் மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ரபிக் என்பவர் மூலமாக பல்வேறு தகவல்களை பெற்றார்.
வழக்கறிஞராக உள்ள யோகேஷ்பாபு என்பவரிடம் இது பற்றி கூறி ஆலோசனை பெற்றார்.

வழக்கறிஞர் யோகேஷ்பாபு திட்டம் தீட்டி கார்மேகம், அருண், சதாம் உள்ளிட்ட கும்பலை தயார் செய்து கடந்த ஜீன்மாதம் 22ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அசாருதினை பிந்தொடர்ந்து சென்றனர்.
திருநீர்மலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்து டம்மி துப்பாக்கி, கைவிலங்கு, வாக்கி டாக்கியுடன் காவல் துறையினர் என கூறி காரில் குன்றத்தூர் பகுதிக்கு கடத்தி சென்றனர்.
அங்கு துப்பாக்கி முனையில் மிரட்டி 25 லட்சம் தராவிட்டால் கைதுசெய்து விடுவோம். மீறினால் என்கவுண்டர் செய்வோம் என கூறி மிரட்டினர்.

மேலும் அசாருதினின் டெபிட்கார்டு, கிரிட் கார்டு என அதில் இருந்த 8 லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் அசாரை அடித்து விட்டு விடுவித்தனர்.

இவர்களால் உயிருக்கு ஆபத்து என பயந்து காவல் நிலையம் போகாமல் செல்போன் எண்களை கொண்டு அசாரூதின் விவரம் தேடினார்.

நிலையில் மீண்டும் அந்த கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டியது.

அசாரூதின், செல்போன்கள், ஆடியோ ரெக்கர்டிங் உடன் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வழக்றிஞர் யோகேஷ்பாபு கார்மேகம்,அருண், சதாம், மற்றும் அசாரிடம் வேலை பார்த்த ரபிக், தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் நடத்தும் இம்ரான், மற்றும் சதீஷ், அண்டனி, வேணுகோபால் ஆகிய 9 பேரை சங்கர்நகர் போலீசார் கைது செய்து விசாரனை செய்தனர். 2 ஐ போன்கள், கை விலங்கு, டம்மி துப்பாக்கி, வாக்கி டாக்கி, ஸ்டிமிங் மிஷின் போன்ற பொருட்களை கைப்பற்றி அவர்கள் மீது ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், மின்னனு பொருட்களை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பல்லாவரம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைதானவர்களின் பலர் கொலை குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.