
தள்ளு…தள்ளு….தள்ளு…..
ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்த பேருந்து 50 பயணியை வைத்து தனி ஆளாக பேருந்தை தள்ளிய நடத்துனர் உதவிக்கு வந்த இருவர் ஒரே தள்ளில் இயக்கபட்ட பேருந்து சமூக வளைதளங்களில் வைரலாகும் காட்சி!
மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கு தாம்பரம், அகரம்தென் செல்லகூடிய 31A வழிதடம் எண் கொண்ட பேருந்து புறபட தயாராக இருந்தது. அப்போது அந்த பெருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்தது. இதனை அறிந்த நடத்துனர் உடனடியாக கீழே இறங்கி ஒற்றை ஆளாக 50 பயணிகளை வைத்து பேருந்தை தள்ள முயன்றார்.
இதனை கண்ட இருவர் நடத்தினருடன் இணைந்து பேருந்தை ஒரே தள்ளில் தள்ளி பேருந்தை இயக்க உதவினர்.
இந்த காட்சி சமூக வளை தளங்களில் வைராலாகிறது.
நாம் நம் கடமையை செய்தால் பலன் உடன் வரும் என்று நெட்டிசன்கள் வளைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.