
மாடம்பாக்கத்தில் மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் யாரும் பாதிக்கப்படாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி மாணவர்களை காப்பாற்றிய கடைக்காரருக்கு பாராட்டு குவிகிறது.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலையில் பயங்கர சத்தத்துடன் சற்றுமுன் மின்கம்பி ஒன்று அறுந்து சாலையின் நடுவே விழுந்தது.
அந்த மின்கம்பியில் இருந்து தொடர்து புகை வந்ததால் மின்சாரம் பாய்வதை அறிந்த, பழையபொருள் கடை ஊழியர் ஒருவர், அங்கு இருந்த மரக்கழிவுகள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தினர்.
பள்ளி,கல்லூரி மாணவர்கள், பள்ளி பேருந்துகள் என படு பிசியாக இருக்க கூடிய சாலையில், மின்சாரம் பாய்ந்துக்கொண்டிருக்கும் கம்பியை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி 30 நிமிடங்களுக்கு மேல் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் செயலாற்றினார். அந்த ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்நிகழ்வால் அங்கு போக்குவரத்துக்கு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் மாடம்பாக்கம் மின் ஊழியர் சம்பவ இடத்திற்க்கு வந்து மின்சாரத்தை துண்டித்தபின், அறுந்து கிடந்த மின்கம்யினை சீர் செய்யும் பணியினை மேற்க்கொண்டார்.