
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் 3% பணி வழங்குவது மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள சர்வேதச கிரிக்கெட் மைதானம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.