இதனையொட்டி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அதுல் மிஷ்ரா , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் உஷா காகர்லா , தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள், நேரில் வந்து செம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஸ்ரீ சர்வமங்களா நகர் சங்க நிர்வாகிகள், சிட்லபாக்கம் ரெய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டதில் ஏரியின் தூய்மை பாதுகாப்பு மற்றும் சுற்றி கான்கரீட் கட்டுமானம் அற்ற கரை அமைத்து தர வேண்டி ஏற்கனவே கோரிக்கை கடிதம் அளித்ததை தெரிவித்தும், நீதிமன்ற வழக்கின் நிலை, மற்றும் ஏற்கனவே இது குறித்து சி.எம் டி.எ மூலம் நடைபெற்ற இரு கூட்டத்திலும் பதிவு செய்ததை மீண்டும் நேரில் தெரிவித்தனர்.