டி20 உலக கோப்பையை இந்தியா இரண்டாவது முறை கைபற்றியதை ஆழ்கடலில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி புரியும் கிரிகெட் ஆர்வலர்கள்

சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியா ளரான இவர் இந்தியா டி20 உலக கோப்பை இரண்டாவது முறையாக கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக , மூத்த கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவவை கெளரவிக்கும் விதமாக சென்னை கிழக்கு கடற்கரை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 கி.மீ தூரம் ஆழ்கடலில் 50 அடி ஆழத்தில் 40 நிமிடங்கள் குழுவினருடன் உரிய சுவாசகருவிகள் உதவியுடன் கிரிகெட் விளையாடியும், வெற்றிக்கோப்பையை கைகளில் ஏந்தி உற்சாக நீந்தி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் அந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியா கோப்பையை கைபற்றியதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் கொண்டாடி வரும் நிலையில் சென்னையில் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தனுஸ்ரீ குழுவினருடன் ஆழ்கடலில் கொண்டாடி மகிழ்ந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.