
ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.
அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு வருகிறது.
27 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, அதன் உறுப்பு பால் சங்கங்கள் மூலம் பால் பதப்படுத்தி வருகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் அனைத்து மாவட்ட பால் ஒன்றியங்களிலும் பால் சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது ஒரு கோடி லிட்டரை நெருங்குகிறது.