கர்நாடகா மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்வு: இன்று முதல் அமல்
ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது. அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு […]
முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள், கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம்.இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும்.இளமையான சருமமாக வைத்திருக்க உதவும்.இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், […]
பால் வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம்?
பச்சை பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும். பச்சை பாலை நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன் கலந்து கை, கால் முகத்தில் தடவினால் நல்லது. ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்லது. பால், தேன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் மசித்த வெள்ளரிக்காயுடன் கலந்து […]
தாம்பரத்தில் காலி மனையில் 2000 பால் பாக்கெட்
தாம்பரம் ஏரிக்கரை தெருவில் உள்ள காலி மனையில் கொட்டப்பட்டு கிடந்த பால் பாக்கெட்டுகள் கடந்த நான்காம் தேதியுடன் காலாவதியான நிலையில் புயல் ஏற்பட்டதால் விற்பனை செய்ய முடியாமல் கடை உரிமையாளர் காலி மனையில் கொட்டி சென்றுள்ளார். பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு சுமார் ஐந்து நாட்கள் ஆனதால் ஏற்கனவே காலாவதியான பால் பாக்கெட் துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஆவின் நிலையம் – விண்ணப்பிக்கலாம்
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். புதிய வகை ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க உள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.
ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையாகிறது
பாலில் சில பொருட்களை கலந்துகுடிக்கும்போது கிடைக்கும் கூடுதல் பயன் ..
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு மிகவும் கிடைக்கின்றது. அது என்ன என தெரிந்து கொள்வோம்.பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதனை அடுத்து பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள […]
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிகளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளா்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை […]