தேவையான பொருட்கள் :
கற்பூரம் 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் – சிறிதளவு, மருதாணி இலை – ஒரு கைப்புடி அளவு, கற்றாழை உட்பகுதி -ஒரு தேக்கரண்டி, வசம்பு பொடி ஒரு தேக்கரண்டி
செய்முறை.:முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.
இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும்.