
சென்னை முகாம் அலுவலகத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிட போக்ஸோ இணைய முகப்பு (POCSO PORTAL) குழந்தைகளுக்கான தனிநபர் பராமரிப்பு செயலி (INDIVIDUAL CARE PLAN APP) தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள வலை பயன்பாடு (WEB APPLICATION) குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கான ஆய்வு மற்றும் கண்காணிப்பு செயலியையும் (INSPECTION AND MONITORING APP FOR CHILD CARE INSTITUTIONS) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அமைச்சர் பி.கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையர், வே.அமுதவல்லி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புத் சேவைகள் துறை இயக்குநர் அமர் குஷ்வாஹா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா, ஆகியோர் உடனிருந்தனர்.