
தொல்லியல் துறை சார்பில் 2022&2023 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – XXVIII & ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டார். இந்தநிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் த.உதயசந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.