சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து, கரும்புகை எழுந்ததால் சுற்றுவட்டத்தில் புகைமூட்டம்

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வயர்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீடீரென தீபற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் மறைமலைநகர், தாம்பரம் ஆகிய இரண்டுவாகனங்கள் விரைந்துள்ளது.