
தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272.
NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே…
தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – 7. அது போன்று சந்திரபாபு நாயுடு வெளியேறினால் ஜெகன் மோகன் ரெட்டி தனது உறுப்பினர்கள் 4 பேருடன் NDAவிற்கு ஆதரவு அளிப்பார். சுயேச்சைகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவுடன் NDAவிற்கு மெஜாரிட்டி கிடைத்து விடும். அதாவது சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இல்லாமலேயே…
இதை உணர்ந்து தான் சந்திரபாபு நாயுடு தெளிவாக பாஜகவுக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.