தாம்பரம் அருகே முட்டை ஏற்றிசென்ற வேன் அச்சு முறிந்து கவிந்து விபத்து, 2000 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.

தாம்பரம் அடுத்த கேம்ரோடு பகுதியில் இயங்கும் ஏ.கே.ஜி முட்டை மொத்த விற்பனை நிலைத்தில் இருந்து ராஜகீழ்பாக்கம், காமராஜபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட கடைகளுக்கு வினியோகம் செய்ய மூடப்பட்ட மினி வேனில் ஏற்றப்பட்ட நிலையில் வேன் ஓட்டுனர் காசிராஜன்(35) வேனை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓட்டிச்சென்றார்.

அப்போது வேனின் முன் அச்சு முறிந்ததால் நிலைத்தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் காசிராஜன் உள்ளிட இரண்டுபேர் லேசான சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனால் வேனில் இருந்த 2000 ஆயிரம் முட்டைகள் சுக்கு சுக்குசாக உடைந்தது. இதனால் உடைந்த முட்டைகள் சாலையில் ஆறாக ஓடியது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் சாலை சாய்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தினார்கள். அதனயடுத்து சாலையில் மண் கொட்டி முட்டை வழவழப்பை போக்கிய பின்னர் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.