
தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மறியாதை,
சென்ட்ரல் ஏர் கமாண்ட் ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர் நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டர்.
தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் அக்னிவீர்வாயு பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் 2023ம் ஆண்டு மூன்றாவது குழுவாக சேர்ந்த 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் 22 வாரங்கள் மெக்கனிக்கல், பணிமனையில் கடுமையான ஆராம்ப கட்ட பற்சியில் தேர்வாகிய நிலையில் இன்று மிடுக்கான உடையில் அணிவகுப்பு மறியாதை செய்தனர்.
சென்ட்ரல் ஏர் கமாண்ட் ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர் நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டர்.
இந்த ஒட்டுமொத்த சிறந்த அக்னிவீர்வாயு வாக பயிற்சிகாலத்தில் ஹாரிஸ் குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பரிசு வழங்கப்பட்டது.
பயிற்சி நிறைவு செய்த அக்னிவீர்வாயு வீரர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அடுத்தகட்ட பயிற்சியில் சேரவுள்ளனர்.
அக்னிவீரர்வாயு வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினர், உயர் ராணுவ அதிகாரிகள் கண்டுகளிக்கும் விதமாக சீருடையில் துப்பாகிகளை சுழற்றியும், தூக்கி வீசி பிடிப்பது, யோகா, நெருப்பு வளையத்தில் தாவுதல், கண்களை கட்டியவாறு துப்பாக்கிகளை கழட்டி மாட்டுதல், தேசிய கொடிபோல் காட்சி தருதல், ஓடு உடைப்பது, நெருப்புடன் உள்ள ஓட்டை உடைப்பது உள்ளிட்ட ஒருங்கினைந்த வீர தீர சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு பார்வையாளர்களை மெய் சிலிர்க வைத்ததது.