
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணியில் கார்த்திக் என்பவரது அட்டை கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம், சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீணிப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது.
தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி , மண்டல குழு தலைவர், பம்மல் தெற்கு பகுதி செயலாளர் வே.கருணாநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.