
செய்முறை: அரைக்கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் கிள்ளிய மிளகாய் வத்தல், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள கீரை கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் திருநெல்வேலி புளி மிளகாய் கீரை குழம்பு தயார்.