சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
சிட்லபாக்கம் 2வது பிரதான சாலைக்கு அருகே அமைந்துள்ள ஏரி நிலப்பரப்பில் விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் “அடையா படையா” எனும் விளையாட்டுப் போட்டிக்கான இலவச கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முகமை தொடங்கி வைத்தார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி பால், முட்டை மற்றும் பழம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில-மாவட்ட அடையா படையா நிர்வாகிகள், ஆதரவாளர் உமாபதி & சன்ஸ் நிறுவன இயக்குநர் திருமதி.பரிமளா சிட்டிபாபு, அரிமா சங்க நிர்வாகி க.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.